தொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். ஆனால் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் மிகவும் மோசமாக விளையாட தொடங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணி 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஏன் இன்னும் பின் வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை குவிக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் 40 ரன்களும் மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 35 ரன்களும் குவித்தனர்.

இதைத்தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் 77 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் எட்டாம் தேதி நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat