நடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்

முதல் செட்டில் தோல்வியடைய போகிறோம் என்ற காரணத்தினால் கோபமடைந்த டென்னிஸ் விளையாட்டின் முதல்தர வீரரான ஜோகோவிச் தவறுதலாக பந்தை எடுத்து நடுவர் மீது அடித்ததால் அப்பொழுதே அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இன்று நடைபெற்ற ரவுண்டாஃப் 16 சுற்றில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த புஸ்த உடன் விளையாடிய பொழுது புஸ்த 6 – 5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதனால் சற்று கோபமடைந்த ஜோகோவிச் பந்தைக் கோபமாக வீச அது பெண் நடுவரின் மீது விழுந்தது. இதனால் சற்று காயமடைந்த நடுவர் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். 

இதைத்தொடர்ந்து மற்ற நடுவர்கள் ஒன்றுகூடி ஜோகோவிச்சை இப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தனர். ஜோகோவிச் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தும் எந்த பலனும் இல்லை. இதைத்தொடர்ந்து ஜோகோவிச் தன்னை எதிர்த்து விளையாடிய புஸ்தவிற்கு வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார்.

இந்த சம்பவம் டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat