இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி சவுத்நப்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அணி விவரம்:
ஆஸ்திரேலியா அணி:
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் நல்ல பார்மில் இருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பது ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை ஆடம் ஜாம்பா அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் நன்றாகவே பந்துவீசி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி என்பதால் அனைத்து வீரர்களும் தங்களது பங்கை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். முதல் டி20 போட்டியில் கேப்டன் மார்கன் அவர்களின் பங்கு அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது. இங்கிலாந்து அணியின் அனைத்து முன்னணி பந்துவீச்சாளர்கள் டி20 அணியில் மீண்டும் இணைந்துள்ளதால் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வானிலை:
இன்றைய ஆட்டத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவு. மேலும் இப்போட்டியின் பிட்ச் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிற்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
நேரம்: மாலை 6.45 ( இந்திய நேரப்படி )
நேரடி ஒளிபரப்பு: Sony Six/ HD, Sony Ten 3 / HD