கையில் இருந்த வெற்றியை இழந்த ஆஸ்திரேலிய அணி – இங்கிலாந்து அணி அபாரம்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா எதிரான முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீசுவதாக தீர்மானித்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஜானி பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மௌலான ஆகியோர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 44 ரன்களும் டேவிட் மலான் 66 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்க, திடீரென்று மளமளவென ஆஸ்திரேலிய அணியின் வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழக்க தொடங்கினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணியால் 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் ஜோர்டன் மற்றும் அதில் ரசீத் ஆகியோரின் அபார பந்துவீச்சு இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் குவித்த டேவிட் மலான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.45 மணிக்கு தொடங்க உள்ளது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat