இந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது

இந்தியாவின் 100 ஆண்டுகள் பழமையான கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி இந்த ஆண்டு நடக்க உள்ள ஐஎஸ்எல் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த ஆண்டு புதிய அணி சேர்க்கைக்கான ஏலத்தையும் ஐஎஸ்எல் நிர்வாகம் தொடங்கியுள்ளதால் ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் பழமையான அணியான மோகன் பாகன் அணி ATK அணியுடன் இணைந்து இந்த ஆண்டு ஐஎஸ்எல் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில் ஈஸ்ட் பெங்கால் அணியும் ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்க உள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat