இன்று பயிற்சியை தொடங்குகின்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இரண்டு வீரர்கள் உட்பட 13 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதித்த 2 வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது பயிற்சியை இன்று தொடங்குகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியான காசி விசுவநாதன், கொரோனா பாதித்த 2 வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களுக்கும் இரண்டு பரிசோதனைகளின் முடிவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த இரண்டு வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது பயிற்சியை இன்று துபாயில் தொடங்க உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல்லில் பங்கேற்க எந்த ஒரு தடையும் இருக்காது என்று கருதப்படுகின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா மற்றும் அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடாமல் இருந்து நிலையில் இன்று அட்டவணை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat