ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து வாரியம் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களை விளையாடி வருகின்றது. இதனால் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளுக்கு வேறு அணியும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு வேறு அணியும் விளையாடி வருகின்றது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டெஸ்ட் போட்டிகள் இல்லாத காரணத்தினால் அனைத்து முன்னணி வீரர்களும் ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சொந்த காரணமாக நியூசிலாந்து சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் இத்தொடரில் இடம்பெறவில்லை. மேலும் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஜேசன் ராய் பெயரும் இத்தொடரில் இடம் பெறவில்லை. 

T20I Squad: Eoin Morgan (captain), Moeen Ali, Jofra Archer, Jonathan Bairstow, Tom Banton, Sam Billings, Jos Buttler, Sam Curran, Tom Curran, Joe Denly, Chris Jordan, Dawid Malan, Adil Rashid, Mark Wood

ODI Squad: Eoin Morgan (captain), Moeen Ali, Jofra Archer, Jonathan Bairstow, Tom Banton, Sam Billings, Jos Buttler, Sam Curran, Tom Curran, Adil Rashid, Joe Root, Chris Woakes, Mark Wood


இளம் வீரர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் ஆகியோர் இத்தொடரில் இடம் பெற்றுள்ளதால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat