டாம் பேட்டன் அதிரடி ஆட்டம் – ஆனால் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால்  போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்து வீசுவதாக தீர்மானித்தார். இங்கிலாந்து அணி வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில்  மோசமாக விளையாடினாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய டாம் பேட்டன் 42 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். எனினும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது, மேலும் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது t20 போட்டி வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat