முஜீப்பின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது கயானா அமேசான் வாரியர்ஸ் அணி

கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 12 வது லீக் போட்டியில் கயானா அமேசான் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஜமாய்க்கா அணி கேப்டன் ரோவன் பவல் பந்துவீசுவதாக தீர்மானித்தார். பேட்டிங்கை தொடங்கிய கயானா அமேசான் அணி வீரர்கள் ஜமாய்க்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜமைக்கா அணி சார்பில் முஜீப் 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜமாய்க்கா அணி 18 ஓவர்கள் முடிவில் 112 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முஜீப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat