எவின் லூயிஸ் அபார ஆட்டம் – செயின்ட் கிட்ஸ் அணி வெற்றி

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணி பார்படாஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் கேப்டன் அம்ரிட் பந்து வீசுவதாக தீர்மானித்தார். பார்படாஸ் அணியை பொறுத்தவரை அனைத்து வீரர்களும் தங்கள் பங்கிற்கு ரன்களை குவிக்க 20 ஓவர்கள் முடிவில்: 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்படோஸ் அணியில் கோரி ஆண்டர்சன் 31 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான எவின் லூயிஸ் பார்படாஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க 19 ஓவர்களில் 152 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய எவின் லூயிஸ் 60 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். 

இந்த வெற்றி மூலம் செயின்ட் கிட்ஸ் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat