மழை மற்றும் பாபர் அசாம் உதவியால் போட்டியை சமன் செய்தது பாகிஸ்தான் அணி

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி இந்த தொடரை வென்றது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 583 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போலோவ் ஒன் பெற்றது. ஆட்டத்தின் இடையில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி வெகுவாக தடைப்பட்டது. 

இந்நிலையில் மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்த நிலையில் 5 நாட்கள் ஆட்டம் நிறைவடைந்தது. இதனால் போட்டி சமன் செய்ததாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக பாபர் அசாம் 63 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த ஆண்டர்சன் தனது 600வது விக்கெட்டை கைப்பற்றினார்.

3 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த சாக் கிராவ்லே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான 3 டி  20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 28-ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat