தடகள வீரர் உசைன் போல்ட்டுக்கு கொரோனா… மேலும் பல விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா வா???

ஜமாய்க்கா நாட்டை சேர்ந்த தடகள வீரரான உசைன் போல்ட் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள குறிப்பில் தனக்குக் கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் ஆனால் தனக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 34வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய உசைன் போல்ட் பல்வேறு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த விழாவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கையில் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னணி வீரரான ரஹீம் ஸ்டெர்லிங் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த விழாவில் எவரும் தனிமனித இடைவெளி இல்லாமல் விழாவை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


உசைன் போல்ட் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த விழாவில் பங்கேற்ற பல விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கருதப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat