பாகிஸ்தான் அணி நிதான ஆட்டம் – 210 ரன்கள் பின் நிலையில் உள்ளது

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் குவித்துள்ளது. 

ஏற்கனவே இரண்டாவது இன்னிங்சில் 273 ரன்கள் எடுத்து போலோவ் ஒன் பெற்ற பாகிஸ்தான் அணி மூன்றாவது இன்னிங்சை தொடங்கியது. நான்காம் நாள் ஆட்டத்தில் அவ்வப்போது மழை பெய்த போதும் பாகிஸ்தான் அணி வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இறுதியில் நான்காவது நாள் முடிவில் 100 ரன்கள் குவித்து 210 ரன்கள் பின் நிலையில் உள்ளது. அதிகபட்சமாக அபித் அலி 42 ரன்கள் குவித்தார்.


நான்காம் நாள் ஆட்டம் ஆய்வு:


பாகிஸ்தான் அணி:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த நாள் தங்களுக்கு வெற்றி நாளாக கருதுவர். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்படும் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் பாகிஸ்தானுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.


இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணி வீரர்கள் மேலும் 3 விக்கெட்டுகளை எதிர்பார்த்து இருப்பார்கள். 


ஐந்தாம் நாள் ஆட்டம் கணிப்பு:


பாகிஸ்தான் அணி:

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்தப் போட்டியை சமன் செய்யவே பாகிஸ்தான் அணி வீரர்கள் முயல்வார்கள். இன்னும் 8 விக்கெட்டுகள் கையிலிருக்கும் நிலையில் இந்த போட்டி சமனில் முடியவே வாய்ப்பு அதிகம் உள்ளது.


இங்கிலாந்து அணி:

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் அசார் அலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்ற இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் முயல்வார்கள். ஏன் இன்னும் மழை குறுக்கிட்டால் இங்கிலாந்து வீரர்களுக்கு தலைவலியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat