பிராவோ அதிரடி ஆட்டம் – மூன்று தொடர் வெற்றிகளை பதிவு செய்தது Trinbago Knight Riders அணி.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 9 வது லீக் போட்டியில் Trinbago Knight Riders அணி Barbados அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற Barbados அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீசுவதாக தீர்மானித்தார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே Trinbago Knight Riders அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அந்த அணியின் வீரர்களான கலின் முன்றோ மட்டும் டேரன் பிராவோ இருவரும் பார்படோஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் Trinbago Knight Riders அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக காலின் மன்றோ 50 ரன்களும் டேரன் பிராவோ 54 ரன்களும் குவித்தனர்.


இதைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பார்படோஸ் அணி தொடக்கத்திலேயே மிகவும் அதிரடியாக விளையாட தொடங்கியது. ஆனால் ஆட்டம் செல்ல செல்ல பார்படோஸ் அணியின் ரன் வேகம் குறைய தொடங்கியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பார்படோஸ் அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 52 ரன்களும் சாய் ஹோப் 36 ரன்களும் குவித்தனர். 


இந்த வெற்றி மூலம் Trinbago Knight Riders அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பேட்டிங்கில் சிறந்து விளங்கிய Colin Munro ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat