கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பத்தாவது லீக் போட்டியில் கயானா அமேசான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி செயின்ட் லூசியா அணி வெற்றி.
டாஸ் வென்ற செயின்ட் லூசியா அணி கேப்டன் டேரன் சாமி டேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். எனினும் செயின்ட் லூசியா அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தொடங்கினர். இருப்பினும் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் முகமது நபி நிதானமாக ஆட 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் லூசியா அணி 144 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 66 ரன்கள் குவித்தார்.
இதைத்தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி செயின்ட் லூசியா அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் அவர்களாலும் வெற்றி இலக்கை எட்ட முடியாத நிலையில் கயானா வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் 66 ரன்கள் குவித்தார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்து விளங்கிய செயின்ட் லூசியா அணியின் ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.