இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் PSG அணியின் ரசிகர்கள் பாரிஸ் நகரில் உள்ள வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.
FC Bayern அணிக்கு எதிராக போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த நிலையில் இந்தத் தோல்வியை தாங்க முடியாத PSG அணி ரசிகர்கள் கண்களில் பட்டது எல்லாம் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை அடித்து உதைத்து அனுப்பினர். மேலும் சில நபர்களை கைது செய்தனர்.
ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் கொரோன ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இதுபோன்ற பிரச்சனைகளால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.