சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich

இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த PSG அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஜெர்மன் நாட்டு அணியான FC Bayern அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தினாலும் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்க இயலவில்லை. இந்நிலையில் இரண்டாம் பாதியில் FC Bayern அணியை சேர்ந்த கோமன் 59வது நிமிடத்தில் கோல் அடிக்க FC Bayern அணி முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை PSG அணியால் கோல் அடிக்க இயலாததால் FC Bayern அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. FC Bayern அணிக்கு சாம்பியன்ஸ் லீக் தொடரில் இது ஆறாவது கோப்பை ஆகும்.

இந்த வெற்றி மூலம் வரும் செப்டம்பர் 24ம் தேதி நடக்க உள்ள சூப்பர் கப் போட்டியில் FC Bayern அணி Sevilla அணியை எதிர்கொள்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat