ஃபாலோ ஆன் பெற்று பாகிஸ்தான் அணி 310 ரன்கள் பின்னிலை

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஃபாலோ ஆன் முறையை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது.


முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 583 ரன்கள் குவித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி ரன் குவிப்பில் ஈடுபட டெஸ்ட் போட்டியில் தனது 17 ஆவது சதத்தை பதிவு செய்தார். இருப்பினும் பாகிஸ்தான் அணியால் இரண்டாவது இன்னிங்சில் 273 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


மூன்றாம் நாள் ஆட்டம் ஆய்வு:


பாகிஸ்தான் அணி:


பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை கேப்டன் அசார் அலி மற்றும் முகமது ரீஸ்வனை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. 


இங்கிலாந்து அணி:


இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மூன்றாம் நாள் ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அதை கச்சிதமாக செய்து முடித்தனர். 


நான்காம் நாள் ஆட்டம் கணிப்பு:


இங்கிலாந்து அணி:


இங்கிலாந்து அணியை பொறுத்தவரை நான்காம் நாள் ஆட்டத்திற்குள் இந்த போட்டியை முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் இருப்பர். 


பாகிஸ்தான் அணி:


பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை மூன்றாவது இன்னிங்சில் தங்களால் முடிந்தவரை விளையாட நினைப்பார்கள். இங்கிலாந்து மைதானத்தை பொறுத்தவரை நான்கு மற்றும் ஐந்தாம் நாட்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் அணியும் ரன் குவிப்பில் ஈடுபட வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat