ஆறு மாத காலமாக WWE போட்டிகளில் இருந்து விலகியிருந்த ரோமன் ரெய்ன்ஸ் இன்று நடந்த சம்மர் ஸ்லாம் PPV தொடரில் மீண்டும் திரும்பி வந்தது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
WWE போட்டிகளில் ரசிகர்களுக்கு மிகுந்த பிடித்தமான வீரரான ரோமன் ரெய்ன்ஸ் லுக்கிமியா என்னும் ரத்தப் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இன்னிலையில் அமெரிக்கா நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தான் உடல்நிலை பாதிக்கப்படும் என்று எண்ணி ரோமன் ரெயின்ஸ் பலநாட்களாக WWE போட்டிகளிலிருந்து விலகி வந்தார்.
ஆனால் இன்று நடைபெற்ற சம்மர் ஸ்லாம் போட்டியில் மீண்டும் ரோமன் ரெய்ன்ஸ் வந்தது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது.