ஜாக் கிராவ்லே இரட்டை சதம் மற்றும் ஜோஸ் பட்லர் அவர்களின் சதம் ஆகியவற்றால் இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நல்ல முன்னிலையில் உள்ளது. மேலும் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 324 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஜாக் கிராவ்லே மற்றும் ஜோஸ் பட்லர் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ஜாக் கிராவ்லே. மறுமுனையில் நன்றாக விளையாடிய ஜோஸ் பட்லர் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லே 267 ரன்களும் ஜோஸ் பட்லர் 152 ரன்களும் குவித்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே சொதப்ப துவங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் குவித்துள்ளது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இரண்டாம் நாள் ஆட்டம் ஆய்வு:
இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இந்த நாள் தாங்கள் நினைத்த அனைத்தையும் நிறைவேற்றியுள்ளனர். ஜாக் கிராவ்லே அவர்களின் ஆட்டம் இன்றைய ஆட்டத்தில் ஒரு மைல்கல்லாக இருந்தது.
பாகிஸ்தான் அணி:
பாகிஸ்தான் அணியை இன்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மோசமாக விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணியை இப்போட்டியில் தோல்வியை நோக்கி அழைத்துச் செல்கிறது.
மூன்றாம் நாள் ஆட்டம் கணிப்பு:
இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை விரைவில் பாகிஸ்தான் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்து போலோ ஒன் முறையில் மீண்டும் பாகிஸ்தான் அணியில் விளையாட அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பாகிஸ்தான் அணி:
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை மழை மட்டுமே அவர்களை காப்பாற்ற வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்து விட்டதால் பரிதாப நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது.