கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அணியை வென்றது.
டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் கேப்டன் எமரிட் பந்து வீசுவதாக தீர்மானித்தார். செயின்ட் லூசியா அணியை பொறுத்தவரை அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்கள் பங்கிற்கு தேவையான ரன்களை குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் லூசியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ பிளக்ஜர் 46 ரன்களும் முகமது நபி 35 ரன்களும் குவித்தனர்.
இதைத்தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் மட்டுமே குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. செயின்ட் லூசியா அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இரண்டிலும் ஜொலித்த முகமது நபி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்