ஜெர்மனியில் நடந்துவரும் யூரோபா கால்பந்து லீக் தொடரில் இன்டர்மிலான் அணியை வீழ்த்தி செவில்லா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி மூலம் ஆறாவது முறையாக யூரோபா சாம்பியன் ஆகிறது செவில்லா அணி.
ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் இன்டர் மிலான் அணியை சேர்ந்த லுக்காகோ பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற இன்டர்மிலான் அணி முன்னிலை வகித்தது. இருப்பினும் இதற்கு பதிலடி கொடுத்த செவில்லா அணி 12 மற்றும் 33 ஆவது நிமிடத்தில் கோல்களை அடிக்க செவில்லா அணி ஆட்டத்தில் முன்னிலை பெற தொடங்கியது.
எனினும் முப்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் டியாகோ கோடின் கோல் அடிக்க இரண்டு இரண்டு அணிகளும் 2 – 2 என்ற கணக்கில் சமனில் இருந்தன. ஆனால் 74வது நிமிடத்தில் இன்டர்மிலான் அணியை சேர்ந்த லுக்காகோ சுய கோல் அடிக்க செவில்லா அணி 3 – 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி நடக்கவுள்ள சூப்பர் கப் போட்டியில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வெற்றி பெறும் அணியுடன் செவில்லா அணி விளையாட உள்ளது.