ரசிகர்களுடன் கால்பந்து போட்டி நடத்த திட்டம்

வரும் செப்டம்பர் 24ஆம் தேதி நடக்கவுள்ள யுரோப்பியன் சூப்பர் கப் போட்டியில் சோதனை முயற்சியாக இரசிகர்களை அனுமதிக்கலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இத்தாலிய செய்தி நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் இதனால் சோதனை முயற்சியாக சூப்பர் கப் போட்டியில் 33%  ரசிகர்களை அனுமதிக்க ஐரோப்பிய கால்பந்து பாதியும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய கால்பந்து வாரியம் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில் விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். 

வரும் செப்டம்பர் 24-ம் தேதி நடக்கும் சூப்பர் கப் போட்டியில் யூரோப்பா தொடரை வென்ற செவில்லா அணியும் சாம்பியன்ஸ் லீக் தொடரை வெல்லும் அணியும் மோதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat