ஜோஸ் பட்லர் மற்றும் ஜாக் கிராவ்லே அபார ஆட்டம் – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் குவிப்பு

ஜாக் கிராவ்லே சதம் மற்றும் ஜோஸ் பட்லர் அவர்களின் அரைசதம் காரணமாக இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயானா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். ஆட்டத்தின் தொடக்கத்தில் ரோரி பர்ன்ஸ் மற்றும் டாமினிக் சிப்லி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க  இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மற்றும் போப் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் ஜாக் கிராவ்லே  பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் வேட்டையை தொடங்கினர். இவர்களின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திக்குமுக்காடிப் போயினர். டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார் ஜாக் கிராவ்லே.

இதன்பின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. ஜாக் கிராவ்லே 171 ரன்களுடனும் ஜோஸ் பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


முதல் நாள் ஆட்டம் ஆய்வு:

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பல வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணியிடம் இருந்து ஒரு தரமான பேட்டிங்க்ஐ பார்க்க முடிந்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் ஜாக் கிராவ்லே தொடக்கம் முதலே நிதானமாக ஆடியது பாராட்டுக்குரிய விஷயம் ஆகிறது. அவருடன் சேர்ந்து ஜோஸ் பட்லர் அவர்களின் பங்கு கவனிக்கப்பட கூடிய விஷயமாகும்.

பாகிஸ்தான் அணி:

முதல் நான்கு விக்கெட்டுகளை எளிமையாக எடுத்தாலும் அடுத்து வரும் விக்கெட்டுகளை எடுக்க பாகிஸ்தான் அணி பெரிதும் தடுமாறியது என்றே கூறலாம். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினாலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவரும் ஜாக்கிரதையாக ஆடியதே இங்கிலாந்து அணிக்கு முதல் நாளில் வெற்றியை தேடி தந்தது. மேலும் பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது பீல்டிங்கில் சொதப்பியது இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய பங்காற்றியது.

இரண்டாம் நாள் ஆட்டம் கணிப்பு:

இங்கிலாந்து அணி:

ஜாக் கிராவ்லே தனது முதல் இரட்டை சதத்தை பதியவும் ஜோஸ் பாட்டில் தனது சதத்தை நோக்கி பயணிப்பர் என்று எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 450 ரன்கள் வரை குவிக்க வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் அணி:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இவர்கள் இருவரின் விக்கட்டுகளை நாளின் தொடக்கத்தில் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர். 

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Illingworth, Michael Gough

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat