கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் Trinbago Knight Riders அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமாய்க்கா அணியை வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற Trinbago Knight Riders அணி கேப்டன் பொலார்ட் பந்து வீசுவதாக தீர்மானித்தார். இதற்கு முன் நடந்த ஐந்தாவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் மைதானம் ஈரமாக இருந்ததை அடுத்து பேட்ஸ்மேன்களுக்கு இப்போட்டி கடினமாக இருந்தது. எனினும் அதிரடியாக ஆடிய பிலிப்ஸ் 52 ரன்கள் குவிக்க ஜமைக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் குவித்தது .
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய Trinbago Knight Riders அணி 18 ஓவர்களில் தனது வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக சுனில் நரைன் 53 ரன்களும் காலின் முன்று 49 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றி மூலம் 4 புள்ளிகளுடன் Trinbago Knight Riders அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பந்து வீச்சில் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி மற்றும் பேட்டிங்கில் 53 ரன்கள் குவித்த சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.