மழையின் குறுக்கிட்டால் எளிதாக வென்றது செயின்ட் லூசியா அணி

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது போட்டியில் லூசியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் DLS முறைப்படி பார்படாஸ் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்ற பார்படாஸ் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே லூசியா அணியின் பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்துவீசியதால் பார்படாஸ் அணியின் ரன் வேட்டையை கணிசமாக குறைத்தனர். இதையடுத்து 18 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை வெகுநேரம் தொடர்ந்ததால்  லூசியா அணிக்கு 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய லூசியா அணி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் குவித்து வெற்றியை அடைந்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ பிளக்ஜர் 7 பந்துகளில் 15 ரன்களை அடித்தார்.

பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் அதிவிரைவு 15 ரன்கள் விளாசிய முகமது நபி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat