தொடரை வெல்லுமா இங்கிலாந்து அணி – மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி Southampton மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இதனால் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் களமிறங்குகிறது.


அணி விவரம்:

பாகிஸ்தான் அணி: 

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபித் அலி மற்றும் ஷான் மசூத் ஆகியோர் நன்றாக விளையாடினாலும் அவர்களுக்கு அடுத்து வரும் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பது பாகிஸ்தான் அணிக்கு சற்று தலைவலியாக உள்ளது. அசார் அலி தன்னை கேப்டனாகவும் பாகிஸ்தான் அணியிலும் தக்கவைத்துக்கொள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மற்றொரு மூத்த வீரரான ஆசாத் ஷபிக் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அனைத்து வீரர்களும் நன்றாக பந்து வீசுவதால் அது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று கருதப்படுகின்றது.

Pakistan Squad: Shan Masood, Abid Ali, Azhar Ali(c), Babar Azam, Asad Shafiq, Fawad Alam, Mohammad Rizwan(w), Yasir Shah, Shaheen Afridi, Mohammad Abbas, Naseem Shah, Imam-ul-Haq, Kashif Bhatti, Shadab Khan, Sarfaraz Ahmed, Sohail Khan


இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கணிக்க முடியாததாகவே உள்ளது. இங்கிலாந்து அணியில் எந்த ஒரு வீரரும் சீராக விளையாடாதது  அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது பார்மை( form) மீண்டும் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை இத்தொடரில் மார்க் வுட் இன்னும் விளையாடாததால் அவருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

England Squad: Rory Burns, Dominic Sibley, Zak Crawley, Joe Root(c), Ollie Pope, Jos Buttler(w), Chris Woakes, Sam Curran, Dominic Bess, Stuart Broad, James Anderson, Jofra Archer, Mark Wood, Ollie Robinson


வானிலை:

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முழுவதும் மழை குறுக்கிட நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Illingworth, Michael Gough

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat