கீமோ பால் மற்றும் Hetmyer ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் கயானா அணி வெற்றி

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் St Kitts அணியை வீழ்த்தி வெற்றி.

இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டன் கிறீன் பந்து வீசுவதாக தீர்மானித்தார். ஆட்டத்தின் தொடக்கத்தில் கிருஸ் லின் மற்றும் எவன் லூயிஸ் ஆகியோர் பொறுப்பாக விளையாடினாலும் பின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழத் தொடங்கின. இறுதியில் St Kitts அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லூயிஸ் 30 ரன்கள் குவித்தார். கயானா அணி தரப்பில் கீமோ பால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கயானா அணி சிம்ரன் Hetmyer அவர்களின் அதிரடி ஆட்டத்தால் 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கயானா அணி தரப்பில் Hetmyer 8 பவுண்டரிகள் மற்றும் 3  சிக்ஸர்கள் உட்பட 44 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.

4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய கயானா அணியை சேர்ந்த கீமோ பால் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat