தனது தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய இயலாது என்றும் தான் அணியில் இணைய மேலும் இரண்டு வார காலம் ஆகும் என்றும் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய வீரர்களும் கடந்த 14ஆம் தேதி சென்னை வந்த நிலையில் ஹர்பஜன் சிங் மற்றும் ஜடேஜா ஆகியோர் விரைவில் அணியில் இணைவதாக தெரிவித்தனர். ஜடேஜா ஓரிரு நாட்களில் அணியில் இணைய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய வீரர்கள் இன்று அல்லது நாளை ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைவர் என்றும் வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.