லிஸ்பன் நகரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த FC Bayern Munich அணி 3-0 என்ற கணக்கில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Lyon அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே FC Bayern Munich அணி தனது ஆதிக்கத்தை செலுத்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரரான Gnabry 18 மற்றும் 33 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க Fc Bayern Munich அணி முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. மேலும் ஆட்டத்தின் கடைசியில் ராபர்ட் லெவண்டொஸ்கி தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க Fc Bayern அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
வரும் 24ஆம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் FC Bayern அணி PSG அணியை எதிர்கொள்கிறது.