ஆசிப் அலியின் அதிரடி ஆட்டத்தால் Jamaika Talawas அணி வெற்றி

St Lucia Hooks அணிக்கு எதிரான போட்டியில் Jamaika Talawas அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டாஸ் வென்ற Jamaika Talawas அணி கேப்டன் போவால் பந்து வீசுவதாக தீர்மானித்தார். முதல் இன்னிங்சில் செயின்ட் லூசியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லூசியா அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 52 ரன்கள் குவித்தார். ஜமைக்கா அணி தரப்பில் பெருமாள் மற்றும் முஜீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜமாய்க்கா அணிக்கு தொடக்கமே சறுக்கலாக அமைந்தது. இருப்பினும் அந்த அணியின் அதிரடி வீரரான ஆசிப் அலி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவிக்க ஜமாய்க்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜமைக்கா அணி சார்பில் ஆசிப் அலி 27 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். லூசியா அணி தரப்பில் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதிரடியாக விளையாடிய ஜமாய்க்கா அணியின் ஆசிப் அலி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat