இந்த ஆண்டிற்கான ஐஎஸ்எல் தொடருக்காக சென்னையின் எப்சி அணி அனிருத் தாப்பா மற்றும் தாய் சிங் உட்பட 8 இந்திய வீரர்களை தக்க வைத்துள்ளது. மேலும் முன்னாள் சென்னையின் எப்சி வீரரான அபிஜித் சர்க்கார் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஐஎஸ்எல் போட்டிகள் கோவாவில் நடக்க உள்ளன. இந்த சீசனுக்கு பல்வேறு அணிகள் பல்வேறு நாட்டு வீரர்களை தங்கள் அணிக்கு ஈர்க்கும் முயற்சியில் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையின் எப் சி யின் மிட் பீல்டர் Raphael Crivelaro அவர்களின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. சென்னையின் எப்சி பல்வேறு இந்திய வீரர்களை மீண்டும் தங்களது பணியில் தொடர வாய்ப்பு கொடுத்துள்ளது.
அனிருத் தாப்பா, தாய் சிங், எட்வின் சிட்னி, தனபால் கணேஷ், பாண்டியன், விஷால் கீத், சாக்தே, தீபக் மற்றும் ரஹீம் அலி ஆகியோரை சென்னையின் எப்சி அணி தங்களது அணியில் தொடங்கி வைத்துள்ளது.
மேலும் முந்தைய சீசனில் சென்னையின் எப்சி பயிற்சியாளரான ஓவன் காயில் ஜம்சேத்பூர் அணி சென்றதால் புதிய பயிற்சியாளர் அறிவிக்கப்படுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.