சுனில் நரைன் அதிரடியால் வென்றது Trinbago Knight Riders அணி

Trinidad நாட்டில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் Trinbago Knight Riders அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதால் ஒவ்வொரு அணிக்கும் தலா 17 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டன. டாஸ் வென்ற Trinbago Knight Riders அணி கேப்டன்  போலார்டு பந்து வீசுவதாக தீர்மானித்து. கயானா வாரியர்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான சிம்ரோன் ஹெட்மையர் மற்றும் ராஸ் டைலர் ஆகியோர் அணிக்கு தேவையான ரன்களை குவித்தனர். 17 ஓவர்கள் முடிவில் கயானா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெட்மையர் 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். 

இதை தொடர்ந்து 17 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய Trinbago Knight Riders அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன் 28 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 16.4 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்து Trinbago Knight Riders அணி வெற்றி பெற்றது. கயானா அமேசான் வாரியர்ஸ் அணி தரப்பில் நவீன் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர

பந்துவீச்சில் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங்கில் 50 ரன்கள் குவித்த சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat