கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் க்கு எதிரான ஆட்டத்தில் அப்போதைய பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ஜோஸ் பட்லர் அவர்களை Mankat முறையில் அவுட் செய்த நிலையில் இதுபோன்ற தவறுகளை இனிமேல் அஸ்வின் செய்யக்கூடாது என்று டெல்லி கேப்பிடல் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் இதுபோன்ற அவுட் செய்யும் முறைகள் கிரிக்கெட்டில் இருந்தாலும் மூத்த வீரரான அஸ்வின் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டது சற்று கவலையைத் தந்தது எனவும் இதுபோன்ற தவறுகளை இனிமேல் அஸ்வின் செய்வதை நான் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது டெல்லி கேப்பிட்டல் அணிக்கு மாறியுள்ளார