சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டிக்கு முன்னேறியது PSG அணி

லிஸ்பன் நகரில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த PSG அணி 3-0 என்ற கணக்கில் ஜெர்மன் நாட்டு அணியான RB Leipzig அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே PSG அணி தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் Marquinhos கோல் அடிக்க PSG அணி முன்னிலை பெற்றது. மேலும் 42 ஆவது நிமிடத்தில் டி மரியா மற்றும் 56 ஆவது நிமிடத்தில் Bernet கோன் அடிக்க PSG அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடக்க இருக்கும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் FC Bayern Munich அணி Lyon அணியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat