மிட்செல் சான்ட்னர் மற்றும் ரஷித் கான் அபார பந்துவீச்சு – Barbados Tridents அணி வெற்றி

Trinidad நாட்டில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் Barbados Tridents அணி St Kitts and Navis Patriots அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற  St Kitts and Navis Patriots கேப்டன் ஏமிரட்ஸ் பந்து வீசுவதாக தீர்மானித்தார். தொடக்கத்திலேயே Barbados Tridents அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் மேயர் பொறுப்புடன் விளையாடி அணியின் ரன் குவிப்பு வழிவகுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் Barbados Tridents அணி 153 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக Barbados Tridents அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். 


இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய St Kitts and Navis Patriots அணி தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழக்காமல் ஆடினாலும் ஆட்டம் செல்ல செல்ல ரன் ரேட் உயர தொடங்கியது. இதையடுத்து மிட்செல் சான்ட்னர் மற்றும் ரஷித் கான் ஆகியோரின் அபார பந்துவீச்சால் St Kitts and Navis Patriots அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் மூலம் Barbados Tridents அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக Barbados Tridents சார்பில் மிட்செல் சான்ட்னர் மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நன்றாக விளையாடிய மிட்செல் சான்ட்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat