இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியின் ஐந்து நாட்களிலும் மழையானது தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது என்று அறிவிக்கப்பட்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி பேக்கிங் செய்வதாக தீர்மானித்தார். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டமும் நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவு அடைந்ததால் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சவுத்அம்ப்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது.
2வது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரிஸ்வான் அவர்களுக்கு வழங்கப்பட்டது