இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான புதிய டைட்டில் ஸ்பான்சராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனமான Dream 11 தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையேயான பிரச்சனை காரணமாக சீன நிறுவனமான விவோ நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஏலத்தில் டாடா, பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டன.

இந்நிலையில் இந்த ஏலத்தில் இந்திய ஆன்லைன் சூதாட்ட நிறுவனமான Dream11 222 கோடிக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக ஏலத்தில் வென்றது. இந்த ஏலம் 31 டிசம்பர் 2020 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.