Sevilla அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-2 என்ற வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் Sevilla அணி இந்த ஆண்டிற்கான யூரோ பார் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை ப்ரூனோ பெர்னாண்டஸ் கோலாக மாற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி ஆட்டத்தில் முன்னிலை வகித்தது. இருப்பினும் விட்டுக்கொடுக்காத Sevilla அணி 26 மற்றும் 78 நிமிடங்களில் கோல்களை அடிக்க இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடக்க உள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இன்டர்மிலான் அணி Shakhtar அணியை எதிர் கொள்கின்றது.
very heavyweight but the quality is quite fantastic.