லலி கா தொடரின் தலைசிறந்த அணியான பார்சிலோனா அணிக்கு நெதர்லாந்தை சேர்ந்த Ronald Koeman பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக லலி கா தொடரில் அடைந்த தோல்வி மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் அடைந்த தோல்வி காரணமாக அந்த அணியின் பயிற்சியாளரான சைட்டான் நீக்கப்பட்டு இருந்த நிலையில் கோமான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோமான் ஏற்கனவே பார்சிலோனா அணிக்காக 1989 – 95 ஆண்டுகளில் விளையாடிய நிலையில் 1998-2000 ஆண்டுகளில் பார்சிலோனா அணிக்கு துணை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து நாட்டுக்காக ஆடியுள்ள கோமான் 78 போட்டிகளில் 14 கோல்களை அடித்துள்ளார். மேலும் அந்த நாட்டின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கோப்பைக்காக காத்திருக்கும் பார்சிலோனா அணிக்கு கோமான் அவர்களின் வருகை நல்வரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்