பார்சிலோனா அணியை உயிரோடு புதைத்த FC Bayern Munich அணி

பார்சிலோனா மற்றும் FC Bayern Munich மோதிய மூன்றாவது கால் இறுதி போட்டியில் பார்சிலோனா அணியை 2-8 என்ற கணக்கில் வீழ்த்தி FC Bayern Munich அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே FC Bayern Munich அணி தனது விறுவிறுப்பான ஆட்டத்தை ஆட தொடங்கியது. முதல் நான்காவது நிமிடத்தில் கோல் அடிக்க தொடங்கிய FC Bayern Munich அணி ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை கோல் அடிப்பதை நிறுத்தாமல் விளையாடி வந்தது. இறுதியில் பார்சிலோனா அணி இரண்டு கோல்களும் FC Bayern Munich அணி எட்டு கோள்களும் அடித்து போட்டியை நிறைவு செய்தனர். அதிகபட்சமாக FC Bayern Munich அணியை பொறுத்தவரை தாமஸ் முல்லர் மற்றும் பிலிப் கொண்டிநியூ ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். 

இந்த வெற்றி மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள FC Bayern Munich அணி நாளை நடைபெறும் கடைசி போட்டியான மான்செஸ்டர் சிட்டி மற்றும் லியொன் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் அரை இறுதிப் போட்டியில் வரும் 20ஆம் தேதி மோதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat