இங்கிலாந்து vs பாகிஸ்தான் : இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 233 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 233 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து விளையாடி வருகின்றது. மழை காரணமாக நேற்றைய நாள் ஆட்டத்திலும் 40 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 

126 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி சீரிய இடைவேலையில் விக்கட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் நன்றாக விளையாடிய முகமது ரிஸ்வான் 60 ரன்களுடன் விளையாடி வருகின்றார். 

இரண்டாம் நாள் ஆட்டம் அலசல்:

பாகிஸ்தான் அணி:

நேற்று நான் குறிப்பிட்டதை போலவே இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆட்டமிழக்காமல் இருந்தது அந்த அணிக்கு நல்ல பலத்தை கொடுத்துள்ளது. மேலும் அடுத்து வரும் மூன்று நாட்களும் இப்போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்தப் போட்டி சமனை நோக்கி செல்லலாம்.


இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இரண்டாம்நாள் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணியை ஆட்டமிழக்கச் செய்து இருக்க வேண்டும். 


மூன்றாம் நாள் ஆட்டம் கணிப்பு:

மூன்றாவது நாளும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது என்பதால் விளையாடும் குறைந்தபட்ச ஆட்டத்திலும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்த இரண்டு அணிகளும் போராடும் என்று எதிர்பார்க்கலாம்.

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Michael Gough

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat