சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மகேந்திரசிங் தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் மகேந்திர சிங் தோனி எந்த ஒரு இந்திய தொடர்களிலும் விளையாடாமல் வந்த நிலையில் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவால் இந்திய அணி ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
இருப்பினும் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் ஆட உள்ளதா ரசிகர்கள் தங்களது மனதை தேத்தி கொண்டுள்ளனர்.