இன்று நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் RB Leipzig அணி 2-1 என்ற கணக்கில் அட்லடிகோ மேட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அட்லடிகோ மடிரிட் அணியும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த RB Leipzig அணியும் காலிறுதி சுற்றில் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் முன்னிலை பெற பல போராட்டங்களை மேற்கொண்டனர். இதற்கிடையே முதல் பாதி இரு அணிகளும் கோல் அடிக்காமல் நிறைவு செய்யப்பட்டது.
இரண்டாம் பாதி தொடங்கியவுடன் RB Leipzig அணியை சேர்ந்த ஒளமோ 50ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க RB Leipzig அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. எனினும் 71 ஆவது நிமிடத்தில் அட்லடிகோ மேட்ரிட் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஃபெலிக்ஸ் கோலாக மாற்ற இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.
ஆட்டம் கடைசி கட்டத்தை நெருங்கிய நிலையில் RB Leipzig அணியை சேர்ந்த ஆடம்ஸ் 88 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க RB Leipzig அணி 2 – 1 என்ற கணக்கில் அட்லடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
வரும் 19ஆம் தேதி நடக்கும் அரையிறுதி போட்டியில் RB Leipzig அணி PSG அணியை எதிர்கொள்கிறது