இந்த மாதம் இறுதியில் நடக்கவுள்ள அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பல யோசனைகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்கா டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாகவும் இந்த தொடரை நடத்த பாடுபடும் அனைவருக்கும் தனது நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

நோவக் ஜோகோவிக் அவர்கள் ஏற்கனவே கோனா தோற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் தொடர் நியூயார்க் நகரில் வரும் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலக தலைசிறந்த வீரரான ரஃபேல் நடால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்த நிலையில் நோவாக் ஜோகோவிச்சின் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிம்மதியாக அமைந்துள்ளது