இங்கிலாந்து vs பாகிஸ்தான்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 126 – 5

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் இன்றைய நாளில் 45 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி டேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். எனினும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி சற்று தடுமாற தொடங்கியது. எனினும் மறுமுனையில் நன்றாக விளையாடிய அபித் அலி 60 ரன்கள் குவித்தார். இதனால் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது.


முதல் நாள் ஆட்டம் கணிப்பு:

பாகிஸ்தான் அணி:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை முதல் நாள் ஆட்டத்தில் சரியாக சோபிக்கவில்லை என்றே கூறலாம். மேலும் பல எதிர்பார்ப்புகளுடன் வெகுநாள் கழித்து பாகிஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்த Fawad Alam டக் அவுட் ஆனது பாகிஸ்தான் அணிக்கு சற்று பின்னடைவை தந்துள்ளது.


இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை முதல் நாள் ஆட்டத்தில் என்ன செய்யவேண்டுமென்று நினைத்தார்களோ அதை கச்சிதமாக செய்து முடித்தனர். முதல் நாள் ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு பெரும் வெற்றியாகவே கருதப்படுகின்றது.


இரண்டாம் நாள் ஆட்டம் கணிப்பு:

பாகிஸ்தான் அணி:

இன்றைய நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிடல் அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் அணி வீரர்கள் இன்றைய நாளில் ஆட்டம் இழப்பதை தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இரண்டாம் நாள் ஆட்டத்தில் குறைந்தபட்ச ஓவர்கள் வீசப்பட்டாலும் அதற்குள் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்க செய்யவேண்டுமென்று நினைப்பார்கள்.

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Michael Gough

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat