இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான 21 வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஏற்கனவே ஜூலை மாதம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. எனினும் இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்ததால் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடவும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடந்து வருகின்றது. இந்த இரண்டு தொடருமே வெற்றி பெற்றுள்ளதால் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து வந்து கிரிக்கெட் போட்டிகளை ஆட சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்கள் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் 21 நபர்களை கொண்ட அணியை வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியில் அனைத்து நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். மன சோர்வு காரணமாக கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி இருந்த கிளன் மேக்ஸ்வெல் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்து வரும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இல்லை என்ற சட்டம் இருப்பதால் ஆஸ்திரேலியா அணி ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி இங்கிலாந்து வந்தடையும் என்றும் மேலும் ஆஸ்திரேலியா அணிக்குள் பயிற்சி போட்டிகளில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தொடர் செப்டம்பர் 16ஆம் தேதி நிறைவடையும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வருகின்றது.

Australia squad: Aaron Finch (c), Sean Abbott, Ashton Agar, Alex Carey, Pat Cummins (vc), Josh Hazlewood, Marnus Labuschagne, Nathan Lyon, Mitchell Marsh, Glenn Maxwell, Riley Meredith, Josh Philippe, Daniel Sams,Kane Richardson, Steven Smith, Mitchell Starc,Marcus Stoinis, Andrew Tye, Matthew Wade, David Warner, Adam Zampa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat