நெய்மரின் அபார ஆட்டத்தால் கடைசி நிமிடத்தில் வென்றது PSG அணி

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதிப் போட்டியில் அட்லான்டா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி PSG அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

லிஸ்பன் நகரில் இன்று நடந்த காலிறுதி சுற்றுப்போட்டியில் இத்தாலி நாட்டை சேர்ந்த அட்லாண்டா அணியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாரீஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் கோல் அடிக்க போராடி வந்தாலும் எதுவும் அவருக்கு கைகூடவில்லை. ஆனால் அட்லாண்டா அணிக்காக 26 ஆவது நிமிடத்தில் மரியோ கோல் அடிக்க அட்லாண்டா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இருப்பினும் கோல் அடிக்க போராடிய பாரிஸ் அணிக்கு எந்த ஒரு கோலும் விழவில்லை. இதைத்தொடர்ந்து கடைசி நிமிடத்துக்கு சென்ற ஆட்டத்தில் பாரிஸ் அணியைச் சேர்ந்த Marquinhos 90வது நிமிடத்தில் கோல் அடிக்கும் பாரிஸ் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. 5 நிமிடம் கூடுதல் நேரம் அளிக்கப்பட்ட நிலையில் பாரிஸ் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் தந்த பந்தை Eric கோல் அடிக்க பாரிஸ் அணி 2-1 என்ற கணக்கில் அட்லாண்டா அணியை வீழ்த்தியது. இதன் மூலம் அரைஇறுதி போட்டிக்கு முன்னேறியது பாரிஸ் அணி. 

நாளை நடக்கும் மற்றொரு காலிறுதிப் போட்டியில் RB Leipzig அணி அட்லடிகோ மேடரியல் அணியை எதிர்கொள்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat