தொடரை சமன் செய்யுமா பாகிஸ்தான் அணி – இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்(Eng vs Pak 2nd Test)

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் இன்று தொடங்க உள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிப்பதால் இப்போட்டி பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா என்ற போட்டியாக அமைய உள்ளது. (Eng vs Pak 2nd Test)

அணி விவரம்:

பாகிஸ்தான் அணி:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை முதலாவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு இடங்களில் நன்றாக விளையாடினாலும் சில இடங்களில் செய்த தவறு அவர்களுக்கு தோல்வியாக அமைந்தது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் பொறுத்தவரை ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் நன்றாக விளையாடினாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவை தந்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடிய Fawad Alam அவர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சாயின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு அசுர பலம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. (Eng vs Pak 2nd Test)

Pakistan Squad: Shan Masood, Abid Ali, Azhar Ali(c), Babar Azam, Asad Shafiq, Mohammad Rizwan(w), Shadab Khan, Yasir Shah, Mohammad Abbas, Shaheen Afridi, Naseem Shah, Fawad Alam, Imam-ul-Haq, Kashif Bhatti, Sarfaraz Ahmed, Sohail Khan

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் இத்தொடரில் இருந்து விலகி உள்ளதால் இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவை தந்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணியில் 4 பந்து வீச்சாளர்கள் இருப்பதால் ஸ்டோக்ஸுக்கு பதிலாக Zak Crawley அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பொருத்தவரை கேப்டன் ஜோ ரூட் மிகப்பெரிய ரன் எடுக்கும் கட்டாயத்தில் உள்ளார். மேலும் பந்துவீச்சை பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காததால் அவரை இப்போட்டியில் நீக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக இப்போட்டியில் மார்க் வுட் களமிறங்க வாய்ப்புள்ளது. (Eng vs Pak 2nd Test)

England Squad: Rory Burns, Dominic Sibley, Joe Root(c), Ollie Pope, Jos Buttler(w), Chris Woakes, Dominic Bess, Jofra Archer, Stuart Broad, James Anderson, Ollie Robinson, Sam Curran, Mark Wood, Zak Crawley

வானிலை:

இப்போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இடி மின்னல்கள் அவ்வப்போது வர வாய்ப்புள்ளதால் ஆட்டம் அவ்வப்போது தடைபடும் என்பதில் சந்தேகமில்லை. (Eng vs Pak 2nd Test)

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Michael Gough

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat