தோனிக்கு கொரோன “நெகட்டிவ்” – பயிற்சிக்காக சென்னை புறப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு கொரோன பாதிப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியின் பயிற்சிக்காக சென்னை வருவதற்கு முன் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் தோனி அவர்கள் கொரோன பரிசோதனை மேற்கொண்டார். 

இந்த கொரோன பரிசோதனை முடிவில் டோனி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தோனி ஆகஸ்ட் 14ஆம் தேதி ( நாளை ) சென்னை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து இந்திய வீரர்களும் அவரவர் சொந்த மாநிலங்களில் எடுக்கப்படும் கொரோன பரிசோதனையில் நெகட்டிவ் வந்தவுடன் சென்னை வருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் சென்னையில் பயிற்சி மேற்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 2 கொரோன பரிசோதனை மேற்கொள்வர் என்றும் பின்னர் இருபதாம் தேதி அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat